Wednesday, April 9, 2014

மாடித்தோட்டம் – இரண்டாம் கட்டம் (Expansion)



நான் முள்ளங்கி பதிவில் கூறிய மாதிரி, Coir Pith Media வைத்து அமைத்த எனது  முதல் மாடி தோட்டம் நன்றாகவே வந்திருக்கிறது. நமது மாடி தோட்டத்தை விரிவு படுத்த, அடுத்த கட்டமாக DO IT YOURSELF KIT –ல் வந்த இருபது Poly Grow Bags-ஐ தோட்டத்தில் அமைக்க ஆரம்பித்தேன். இதில் பொதுவாக கீரைவகைகளை போடலாம் என்று இருக்கிறேன். இந்த வருட இறுதியில் Shade Net எல்லாம் வைத்து அமைக்கும் வரை பெரிதாய் ஏதும் செய்ய முடியாது (எங்க வீட்டை சுற்றி நிறைய காலி இடமாக கிடப்பதால் நிறைய அனல் காற்று அடிக்கும். பெரிய செடிகள் தாக்கு பிடிக்காது)

நிறைய நண்பர் கேட்கும் விவரம், Coir Pith வைத்து தொட்டிக்கான மண் தயாரிப்பது பற்றி. எவ்வளவு விகிதம் மண் கலக்க வேண்டும், வேறு என்ன என்ன கலக்க வேண்டும் என்பது பற்றி. இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்கிறார்கள். சிலர் Fungicide போன்ற மக்க வைக்கும் பூஞ்ஜானங்களை போட்டு Coir Pith-ஐ மக்க வைத்து, பிறகு அதில் உரம் கலந்து பயன்படுத்துகிறார்கள் (DO IT YOURSELF KIT also suggesting the same method). இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், perlite, vermiculite என்று சில பொருட்களை கலந்து தயாரிக்கிறார்கள்.

இருக்கிறத வச்சி எளிதாய் செய்வது தான் நம் தோட்டம். கிடைக்கும் அனுபவத்தை வைத்து நாமே சரி செய்து கொள்ளவேண்டியது தான். என் மாடி தோட்டத்திற்கு நான் எடுத்து கொண்டது, Coir Pith, செம்மண், மண்புழு உரம். இதை 2:1:1 என்ற விகிதத்தில் எடுத்து கொண்டேன். மண்புழு உரம் இங்கே TNAU-ல் விலை குறைச்சலாக கிடைபதால் பிரச்னை இல்லை. விளைச்சல் நன்றாகவே வந்திருக்கிறது.போன சில மாடிதோட்டம் பதிவுகளை பார்த்தால் செடிகளின் பசுமையும் விளைச்சலும் உங்களுக்கே தெரியும்.  ஒரு செடி முருங்கையை வெறும் Coir Pith, செம்மண் கலவை மட்டுமே வைத்து ஒரு முயற்சியாக வைத்திருக்கிறேன். அதன் மேல் கொஞ்சம் உரம் கலந்தால் போதும். Coir Pith என்பது ஒன்றுமே இல்லாத வெறும் சக்கை தான். நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் அவ்வளவே. அதில் செடிக்கு தேவையான உரங்களை நாம் கலந்து கொள்ளவேண்டியது தான். செம்மண கலப்பது கிட்டதட்ட செடிக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து விடும்.

நான் இரண்டு விதமான கலவை எடுத்துக்கொண்டேன். முதல் கலவை வெறும் Coir Pith மற்றும் செம்மண் மட்டும். இதை ஒரு பாதி அளவுக்கு நிரப்ப பயன்படுத்திக்கொண்டேன் (இதனால் மண்புழு உரம் தேவையை குறைக்கலாம்). மேல் பாதிக்கு Coir Pith, செம்மண் மற்றும் மண்புழு கலவையை போட்டு விட்டேன்.    

DO IT YOURSELF KIT-ல் ஒவ்வொரு பைக்கும் இரண்டு கிலோ அளவிலான Coir Pith Block வைத்திருந்தார்கள். நான் மேலே கூறிய படி பயன்படுத்திய போது 15 பிளாக்குகள் தான் தேவை பட்டது (மணலும் உரமும் கலந்து விட்டதால்). இப்போது அடிக்கும் வெயிலை பார்க்கும் போது, ஜூன் தொடக்கத்தில் விதைகள் போட்டு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதுவரை அவ்வப்போது கொஞ்சம் நீருற்றி வந்தால் கலவை மக்கி நமக்கு தயாராகி கொண்டிருக்கும்.                

DO IT YOURSELF KIT-ல் இருந்து இன்னும் கீழே விரிக்கும் பாலிதீன் சீட் கொடுக்கவில்லை. சென்னையில் கொடுத்துவிட்டார்கள். இங்கே கேட்டதற்கு தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி மானிய பொருட்கள் எல்லாம் கொடுக்க தடையாம் (கொடுத்ததில் மிச்சத்தை கொடுக்க என்னப்பா தடை?). மாடிதோட்டத்திற்கு நீர் இறங்காமல் இருக்க தரை விரிப்பு அவசியமா என்றால், நான் பார்த்த பெரிய பெரிய மாடிதோட்டங்கள் எல்லாம் எந்த விரிப்பும் இல்லாமல் தான் செய்திருக்கிறார்கள். நாம் பைகளில் நீருற்றுவதில் சில துளிகள் தான் வெளியே தெறிக்க போகிறது. அதனால் ஒன்றும் பிரச்னை வருவதில்லை. பெரிய அளவில் நீர் தங்காமல் பார்த்துக் கொண்டால் போதும்.






30 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி தனபாலன். நானும் போய் அவரின் தளத்தை பார்க்கிறேன்.

      Delete
  2. மாடித்தோட்டம், விரிவான விளக்கங்கள். சூப்பர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்கள் பிளாக் மிகவும் அருமையாக உள்ளது. இன்னும் நன்றாக தோட்டம் செய்ய வாழ்த்துக்கள்.

    TNAU-வில் பஞ்சகவ்யா எனும் இயற்கை ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு மற்றும் பூச்சி விரட்டி மருந்து கிடைக்கிறது. சரியான விலை தெரியவில்லை. ஆனால் விலை கம்மிதான்.

    இம்மருந்தை நீரோடு கலந்தும் தெளிக்கலாம். விசாரித்து பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்குமார்.

      நானும் பஞ்சகாவ்யா பற்றி எழுத நினைதிருக்கேன். நீங்கள் சொல்வது சரி தான். TNAU ல் விலை குறைவாகவே கிடைக்கிறது. மொத்த விவரத்தையும் அடுத்த பதிவில் கொடுக்கிறேன். நீங்கள் கோவையா? சென்னையா?

      Delete
    2. RS 15/lit -I do recollect

      Delete
  4. Siva, Sooper kalakkunga neenga...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமல். உங்கள் மடலை பார்த்தேன். Coir Pith சென்னையில் எங்கு கிடைக்கும் என்று விசாரித்து இன்னும் ஓரிரு நாளில் கூறுகிறேன். இங்கே கோவையில் என்றால் நானே கொடுத்து விடுவேன் :-) .

      Delete
  5. வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவுகள் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. நமக்கு மாடி வீடு இல்லை. ஆனால் எதுக்கும் தெரிஞ்சு வச்சுக்கலாமுன்னு உங்க பதிவுகளைத் தொடர்கின்றேன்.

    அருமையான படங்களுடன் விளக்கங்கள் சுவாரசியமா இருக்கு சிவா.

    ReplyDelete
  7. //இங்கே கேட்டதற்கு தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி மானிய பொருட்கள் எல்லாம் கொடுக்க தடையாம் (கொடுத்ததில் மிச்சத்தை கொடுக்க என்னப்பா தடை?).//
    :)
    Me too waiting for that :(

    ReplyDelete
  8. உங்களுடைய இந்த பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கேன்
    http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அறிமுகத்திற்கும், அதை தெரிவிததற்கும் மிக்க நன்றி Angelin. உங்கள் அறிமுகத்தை நானும் வந்து பார்த்து, மற்ற தோட்டம் பற்றியும் தெரிந்து கொண்டேன். நன்றி

      Delete
  9. மாடியில் தண்ணீர் நின்றால் கூரைக்கு பிரச்சனை வருமா?? - நாம் அந்த அழகில் தான் கான்கிரீட் போடுகிறோம் என்பதை நினைக்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் இதுவரை பார்த்தவரை மாடியில் சிதறும் தண்ணீர் ரொம்ப ஒன்றும் பாதிப்பு வராது. பெரிய பெரிய மாடி தோட்டங்களே வெறும் தரையில் தான் அமைத்திருக்கிறார்கள். பெரிதாய் ஏதும் Water Proof பெயின்ட் மாதிரி தேவை படாது. இருந்தால் ஒரு பாலிதீன் விரிப்பு வேண்டுமானால் போட்டு கொள்ளலாம்.

      Delete
  10. https://www.facebook.com/photo.php?fbid=3959295478007&set=o.169767216467800&type=3&theater

    ReplyDelete
    Replies
    1. You seems to have a bigger garden in terrace. Wow.. Super.. I too wanted to set-up a shade-net on the terrace.

      You are growing vegetables also. Very nice boss

      I saw one pink flower with very thick leaf. What is that plant? Very beautiful.

      Delete
  11. Just came across your post Siva, very nice and neatly presented. Can you please let me know where I can get 'Manpuzhu uram'? You have mentioned as TNAU, do they have any store in Agri university for this? Please suggest.

    ReplyDelete
    Replies
    1. There won't be any specif shop in TNAU. Everything, you need to go to the respective department only to get it. You need to go to the main gate opposite to the botanical garden gate (when you go from Gandhipuram towards Marudhamalai, it will be the second main gate on the left side). Will be open only in weekdays (Mon - Fri).

      Delete
  12. Hi good explanations keep going. can u say me about where to get those bags for gardening

    ReplyDelete
    Replies
    1. Hi,

      Where are you from? Please send a mail to me. Will share the details. You can check online also.

      Delete
  13. This is very useful to me thankyou

    ReplyDelete